Random Health Tips - 1


1. நரம்பு தளர்ச்சி:

சின்ன வெங்காயத்தை சிறு துண்டுகளாக நறுக்கி பனங்கற்கண்டு சேர்த்து வதக்கி காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் நரம்பு தளர்ச்சி நீங்கும்.

2. தொப்பை குறைய:

ஒரு டம்ளர் வெந்நீரில் ஒரு எலுமிச்சையை நன்கு பிழிந்து கலந்து கொண்டு பின் அதோடு மூன்று பல் பூண்டை சேர்த்து பதினைந்து நிமிடங்கள் ஊறவிடவும். பின் பூண்டு பற்களை அகற்றிவிட்டு காலையில் வெறும் வயிற்றில் குடித்தால் உடலில் உள்ள தேவையற்ற கெட்ட கொழுப்புகள் கரைந்து தொப்பை குறையும்.

3. அஜீரண கோளாறு நீங்க:

நீங்கள் காலையில் எழுந்தவுடன் அஜீரணமாக உணர்வதற்கு காரணம் இரவில் நேரம் கழித்து சாப்பிடுவதால் தான். நீங்கள் தூங்கபோவதற்கு மூன்று மணி நேரம் முன்பு இரவு உணவை சாப்பிட வேண்டும்.
அஜீரணத்தை குணமாக்க 8 முதல் 10 கருப்பு திராட்சையை இரவு முழுவதும் ஊற வைத்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும்.

4. பப்பாளி சாப்பிடுவதால் குழந்தைகளுக்கு கிடைக்கும் நன்மைகள்:

பப்பாளி பழத்தை அடிக்கடி குழந்தைகளுக்கு கொடுத்து வர உடல் வளர்ச்சி துரிதமாகும். 
எலும்பு வளர்ச்சி மற்றும் பல் உறுதி ஏற்படும்.

5. உடல் சூட்டை தணிக்க:

கற்றாழையை எடுத்து அதன் தோலை நீக்கிவிட்டு நன்றாக கழுவி பின்னர் மிக்ஸியில் போட்டு அரைத்து மோர் மற்றும் சிறிது அளவு உப்பு கலந்து தினமும் காலையில் அருந்தி வர உடல் சூடு நன்றாக குறையும். உடலுக்கு புத்துணர்ச்சியும் அளிக்கும். கற்றாழையில் 96 சதவீதம் நீர்ச்சத்து உள்ளது. 


Comments