Minsara Thailam - Best medicine for Cold/Body pain

ஜலதோஷம் மற்றும் மூட்டு / இடுப்பு வலிக்கு மின்சார தைலம் 
சித்த மருத்துவம்


மின்சார தைலம் தயாரிக்கும் முறை:

1. பின் வருபவை நாட்டு மருந்து கடையில் கிடைக்கும்

a. புதினா உப்பு - 20 gm 

b. ஓம உப்பு - 20 gm

c. கட்டி கற்பூரம் (or) பச்சை கற்பூரம் - 20 gm 

(Thymol + Menthol + Camphor)

2. இம்மூன்றையும் சம அளவு வாங்கிக்கொள்ளவும்.
3. இதை காற்று புகாத ஒரு டப்பாவில் அல்லது கண்ணாடி பாட்டிலில் போட்டு குலுக்க வேண்டும்.5 or 6 நிமிடங்கள் குலுக்கியவுடன் அது திட நிலையில் இருந்து திரவ நிலைக்கு மாறிவிடும்.

இப்பொழுது தைலம் தயார்.இது மிகவும் வீரியமான தைலம்.

மின்சார தைலத்தின் பயன்பாடுகள்:

1. ஜலதோஷம் இருந்தால் மின்சார தைலத்தை அடிக்கடி முகர்ந்து பார்ப்பதால் சிறிது Relief கிடைக்கும்.
2. மேலும் ஆவி பிடிக்கும் பொழுது மின்சார தைலத்தை 1 அல்லது 2 சொட்டுகள் நீரில் கலந்து ஆவி பிடித்தால் ஜலதோஷம் விரைவில் குணமாகும்.
3. உடலில் எங்கெல்லாம் வலி உள்ளதோ அங்கெல்லாம் ஓரிரு சொட்டுகள் மட்டுமே தேய்க்க வேண்டும். 
4. தலை வலி அல்லது முழங்கை, மூட்டு, இடுப்பு போன்ற இடங்களில் வலி இருந்தால் 1 அல்லது 2 சொட்டுகள் தேய்த்துக் கொண்டால் வலி பறந்து போகும்.

உங்கள் கவனத்திற்கு:

1. மின்சார தைலம் மிகவும் வீரியமானது. 
2. கண் அல்லது மற்ற Sensitive ஆனா உடல் பாகங்களில் இந்த தைலம் பட்டால் முகம் எரிச்சல் உண்டாகும். 
3.தலை, முழங்கை, மூட்டு, இடுப்பு போன்ற இடங்களில் கூட ஓரிரு சொட்டுகளுக்கு மேல் பயன்படுத்தினால் எரிச்சல் உண்டாகும்.

Comments