How to stop Hiccup / விக்கலை நிறுத்துவது எப்படி


விக்கல் வர காரணங்கள் : 

வேக வேகமாக உணவை சாப்பிடுவது, மிகச்சூடாக சாப்பிடுவது , தேவையான அளவுக்கு தண்ணீர் அருந்தாதது போன்றவை விக்கலுக்கு முக்கிய காரணங்கள்.

வலி நிவாரணி மாத்திரைகள், சில குறிப்பிட்ட வகை மாத்திரைகளை சாப்பிட்டாலும் விக்கல் வரும். 

இரண்டு நாட்களுக்கு மேல் விக்கல் தொடர்ந்தால், அது நோய்க்கான அறிகுறியாகும். உதாரணத்திற்கு, 
1. இரைப்பையில் அல்சர் இருக்கும்போது
2. சிறுநீரகம் பழுதாகி ரத்தத்தில் யூரியா அளவு அதிகரிக்கும்போது
3. உதரவிதானத்தில் நோய்த்தொற்று 
4. கல்லீரல் கோளாறு 
5. நுரையீரல் நோய்த்தொற்று 
6. குடல் அடைப்பு 
7. மூளைக்காய்ச்சல்
8. கணைய அழற்சி 
9. பெரினிக் நரம்புவாதம்
போன்றவற்றாலும் விக்கல் வரும்.

விக்கலை நிற்க வைக்கும் வழிகள்:

1. மூச்சை நன்றாக உள்ளிழுத்து அடக்கிக்கொள்ளுங்கள். 20 எண்ணும் வரை மூச்சை வெளியில்விட வேண்டாம். பிறகு தான் மூச்சை வெளியில்விட வேண்டும்.இப்படி 5 முறை செய்தால் விக்கல் நின்றுவிடும். 
2. வேகமாக ஒரு சொம்பு குளிர்ந்த தண்ணீர் குடித்தால், விக்கல் நின்றுவிடும்.
3. ஒரு தேக்கரண்டி சக்கரையை நாக்கில் வைத்து அதை தானாக கரையவிட்டால் விக்கல் நிற்கும்.
4. ஏதேனும் ஒரு வகையில் தும்மலை உண்டாக்கினால்
விக்கல் நிற்கும்.
5. ஒரு காகிதப்பைக்குள் மூச்சை விடுங்கள். பிறகு அந்த காற்றையே மீண்டும் ஸ்வாசியுங்கள். இவ்வாறு சற்று நேரம் செய்தால், ரத்தத்தில் carbondioxide அதிகரித்து, விக்கல் நின்றுவிடும்.

உங்கள் கவனத்திற்கு:

அடிக்கடி விக்கல் ஏற்பட்டாலோ, 2 நாட்களுக்கு மேல் விக்கல் நீடித்தாலோ மருத்துவரை ஆலோசிப்பது நல்லது.

Comments